சொந்தங்களின் ஆவலுக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

தமிழகம் முழுவதும்,

நம் சமுதாய மக்கள், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உறவுப்பாலத்தின் பணியை ஊக்கப்படுத்தி, சிறப்பாக சேவை செய்ய வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். சுயநலமற்ற சேவை மனப்பான்மையை பெரிதும் வரவேற்கின்றனர்.

மேலும் அவரவர் மாவட்டங்களில், நம் மக்களின் சமுதாயத்தின் குலம்வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை 2017 ம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக செய்துமுடிக்க விருப்பம் கொண்டு, அவர்களின் ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

நமது எண்ணம், நம்சமுதாய மக்களை ஒன்றுபடுத்தி, கல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, உயர்பதவி, அரசியல், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும், நமது வாழ்க்கை தரம்உயர அனைவரையும் கலந்து தெளிவாக, நிலையான திட்டங்களை தீட்டி, நம்சமுதாயத்திற்கு தொடர்ந்து, தொய்வின்றி சிறப்பாக சேவை செய்வோம்.

அனைவரும் ஒன்று படுவோம்! பாடுபடுவோம்!! உயர்வுபெறுவோம்!!!

வாழ்த்துக்கள்,

உங்கள் அன்பிற்கினிய,
உதகை செங்குட்டுவன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)