1 . முதலில் தமிழகம் முழுவதும் நாம் எவ்வளவு பேர் வசித்து வருகின்றோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். நீங்களும் நம் சமுதாய வளர்ச்சிக்கு ஆலோசனையை பகிர்ந்து கொள்வீர்கள்.
2 . அவரவர் சார்ந்த குலத்தினர் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்பதை நீங்களே அறிந்துகொள்ள முடியும். சமுதாய சொந்தங்களோடு தொடர்புகொண்டு உறவுகளை மேம்படுத்திக்கொள்ள உறவுப்பாலம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
3 . நம் சமுதாய மக்களின் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் எந்த நிலையில் உள்ளனர் என்பதை நீங்கள் அறிய முடியும்.
4 . திருமண வயதில் உள்ள நம் சமுதாயக் குழந்தைகளுக்கு எளிதாக வரன் பார்த்துக்கொள்ள முடியும். திருமணசேவைக்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இச்சலுகையை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும்.
5. சமுதாய நிகழ்ச்சிகள் எங்கெங்கு யார் யார் தலைமையில் எதற்க்காக நடைபெறுகிறது என்ற விபரங்களையும் உறவுப்பாலத்தில் நாங்கள் பதிவிடுவோம், அதனால் அந்த நிகழ்ச்சியின் பலன் யாது என்பதை நீங்கள் அறியலாம், விமர்சனமும் செய்யலாம்.
மேலும் உறவுப்பாலத்தின் சேவை விபரங்கள் தொடரும்.
வாழ்த்துக்கள்.
நம்சமுதாய சேவையில் உங்களின்,
உதகை செங்குட்டுவன்