“உறவுப்பாலம்” எவ்வாறு நம் சமுதாயத்திற்கு சேவை செய்ய விருப்பம் கொண்டுள்ளது:

1. நம் சமுதாய மக்களிடையே நல்ல பரஸ்பர ஒற்றுமையை உருவாக்கப் பாடுபடும். நம் சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படுத்துவது என்பது நமக்கு ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. அதற்கு காரணம், நம்மிடையே பலரிடம் “காழ்ப்புணர்ச்சி” கவ்விக்கொண்டுள்ளது. நம்மிடையே பல சமுதாய அமைப்புகள் இருந்தாலும், ஏதோ ஒரு காரணத்தால் நம்சமுதாயம் ஒற்றுமையின்றி வளர்ச்சிபெறாமால் சேவை செய்யாமல் பெயருக்குமட்டுமே இருந்து வருகிறது. எனவேதான் நமது சமுதாயத்திற்கு ஒரு அடிப்படை கட்டமைப்பு தேவை என சிந்தித்து, சுயநலமின்றி, நம்சமுதாய மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் “உறவுப்பாலம்” (அனைத்து நம் சமுதாய அமைப்புகளையும் மற்றும் அரசியல் கட்சிகளையும் சாராதது) ஈடுபட்டுள்ளது.
2. நம் மக்களின் கிராம நிர்வாகிகளை தேர்வு செய்து கிராமத்தில் நம் சமுதாய மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும்.
3. ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம நிர்வாகிகளைக்கொண்டு ஒன்றிய நிர்வாகிகளைத்தேர்வு செய்து ஒன்றியத்தில் நம் சமுதாய மக்களுக்கு ஒன்றியத்திற்குட்பட்டு அரசியல் அங்கீகாரம் கிடைக்கப்பாடுபடும்.
4. மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய நிர்வாகிகளைக்கொண்டு மாவட்ட நிர்வாகிகளைத்தேர்வு செய்து மாவட்ட அளவில் நம் சமுதாய மக்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கிடைக்கப்பாடுபடும்.
5. மாவட்ட நிர்வாகிகளைக்கொண்டு மாநில நிர்வாகிகளைத்தேர்வு செய்து நம் சமுதாய மக்களுக்கு அரசியலில் தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைக்கப்பாடுபடும்.
6. நம் சமுதாயக்குழந்தைகள் கல்வி கற்க தேவையான அனைத்துப்பாட உரைகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ள உறவுப்பாலத்தில் வசதி செய்யப்படும் (அதில் பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம், இந்திய ஆட்சிப்பணி உட்பட அனைத்துவிதமான படிப்புகள் மற்றும் கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வுக்கான உரைகளும் அடங்கும்).
7. உயர்கல்வி படிக்கும் நம் சமுதாய ஏழைக் குழந்தைகளுக்கு பொருளாதார உதவி செய்ய “டிரஸ்ட்” அமைக்கப்படும்.
8. இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு பயிலும் நம் சமுதாயக்குழந்தைகளுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க “ஐ.ஏ.எஸ். அகாடமி” அமைக்கப்படும்.

மேலும் உறவுப்பாலத்தின் சேவை விபரங்கள் தொடரும்.
வாழ்த்துக்கள்.
நம்சமுதாய சேவையில் உங்களின்,
உதகை செங்குட்டுவன்