தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு
TAMILNADU KURUMANS TRIBAL PEOPLE FEDERATION
துவக்கம்: 16.12. 2012
நாள்: ஞாயிற்றுக்கிழமை
இடம்: ஸ்ரீ வீரபத்திரசுவாமி திருமண மண்டபம், திருவண்ணாமலை
மாநில அமைப்பாளர்: திரு உதகை செங்குட்டுவன், சென்னை
கூட்டம் ஏற்பாடு: குருமன்ஸ் பழங்குடியினர் நல சங்கம், திருவண்ணாமலை
வரவேற்புரை: திரு கே. முருகேசன், திருவண்ணாமலை
தலைமை: திரு எஸ். ஆறுமுகம், திருவண்ணாமலை
முன்னிலை: திரு எம். பாண்டியன், சென்னை
சிறப்புரை: திரு சாம்பசிவம், திருவண்ணாமலை
- திரு ராமராஜ், நெய்வேலி
- திரு ராஜு, தர்மபுரி
- திரு கணேசன், துறையூர்
- திரு முத்துசாமி, திருச்சி
- திரு சிவலிங்கம், வேலூர்
- திரு கந்தசாமி, சேலம்
- திரு கந்தவேல், திண்டுக்கல்
- திரு வீரபத்திரன், வேலூர்
- திரு ரவி, தருமபுரி
- திரு கோவிந்தன், திருச்சி
நன்றியுரை: திரு பழனிவேல், திருவண்ணாமலை
தமிழகத்தில் வசிக்கும் நம் குருமன்ஸ் பழங்குடியினர் (குருமா, குரும்பா, குரும்ப கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர்) இனத்திற்கு எதிராக பல்வேறு அரசாணைகளை (தமிழக அரசு அதிகாரிகள்) பிறப்பித்து, நம் சமுதாய மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதை கண்டித்தும், நம் சமுதாயத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்ய புதியதாக ஒரு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளதை நாம் எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த 09.12.2012 – ஞாயிற்றுக் கிழமை சென்னை வில்லிவாக்கத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த கூட்டத்தில் சில மாவட்ட முக்கியஸ்தர்கள் / பிரதிநிதிகள் கலந்துகொள்ள இயலாமல் போனதால் அனைத்து தமிழக பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் விதமாக “திருவண்ணாமலையில்” கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், அரசாங்க அதிகாரிகளின் அணுகுமுறையால் நம் சமுதாய மக்கள் அரசின் சலுகைகளை அனுபவிக்க இயலாத நிலையை விளக்கினார்கள் மேலும் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
- தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் இயங்கிவரும் நம் இன சங்கங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து “தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு” (TAMILNADU KURUMANS TRIBAL PEOPLE FEDERATION) – என்ற பெயரில் ஒரே அமைப்பாக தமிழகம் முழுவதும் நம் சமுதாய மக்களுக்கு சேவை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முதல்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு அமைப்பாளர்களை தேர்வு செய்வது என்றும், அந்த அமைப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் இருந்தால் அவைகளை ஒன்றாக இணைத்து அம் – மாவட்டத்தின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 5 – செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்து விபரங்களை மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றுகூடி ஏகமனதாக மாநில பிரதிநிதிகளை தேர்வுசெய்வது என்றும் மாநிலப்பிரதிநிதிகள் – தமிழக அரசு மற்றும் மத்திய அரசுப்பிரதிநிதிகளை அணுகி நம் சமுதாய மக்களுக்கு உரிமைகள் மற்றும் சலுகைகள் பெற்றுதருவதற்க்கான செயல்பாடுகளை மேற்கொள்வதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மாநில பிரதிநிதிகளாக – மாநில தலைவர், மாநில துணைத்தலைவர், மாநில செயலாளர், மாநில துணைசெயலாளர் மற்றும் மாநில பொருளாளர் ஆகிய பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகிகளால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் மாவட்டப் பொருப்பாளர்களே மாநில செயற்குழு உறுப்பினர்களாக இருக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
- மாநிலம் முழுவதும் பிரதிநிதிகளை தேர்வு செய்யப்பட்டு பொறுப்புக்களை ஏற்கும்வரை – மாவட்டப்பொறுப்புகளை அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களும், மாநில பொறுப்புகளை மாநில அமைப்பாளர்களும் ஏற்று “தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி மக்கள் கூட்டமைப்பை” வழிநடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நம் சமுதாய சங்கம் – ஒரே பெயர், ஒரே கொடி, ஒரே சின்னம், ஒரே தலைவர் என ஒன்றுபட்டு செயல்படுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மாநில ஒருங்கிணைப்பாளர்கள்:
- திரு உதகை செங்குட்டுவன், சென்னை
- திரு எம். பாண்டியன், சென்னை
- திரு எஸ். ஆறுமுகம், திருவண்ணாமலை
- திரு டி. ராஜு, தருமபுரி
- திரு வி. கந்தசாமி, சேலம்
- திரு எல். சிவலிங்கம், வேலூர்
- கீழ்க்கண்ட அமைப்பாளர்கள் மாவட்ட வாரியாக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- திருவண்ணாமலை மாவட்டம்
- திரு சாம்பசிவம்
- திரு கே. முருகேசன்
1. வேலூர் மாவட்டம்
- திரு பி. வீரபத்திரன்
- திரு கோ. அரங்கநாதன்
2. தருமபுரி மாவட்டம்
- திரு சீனிவாசன்
- திரு குப்புசாமி
3. கிருஷ்ணகிரி மாவட்டம்
- திரு அண்ணாமலை
- திரு வி. கணேசன்
4. சேலம் மாவட்டம்
- திரு வி. கந்தசாமி
- திரு வி. மாணிக்கம்
5. பெரம்பலூர் மாவட்டம்
- திரு ஊ. மார்கண்டேயன்
- திரு ஆர். தியாகராஜன்
6. திருச்சி மாவட்டம்
- திரு முத்துசாமி
- திரு கோவிந்தன்
7. தஞ்சாவூர் மாவட்டம்
- திரு கலியமுர்த்தி
- திரு சபாபதி
8. புதுக்கோட்டை மாவட்டம்
- திரு அழகிரிசாமி
- திரு அபிராமி சுப்பையா
9. திண்டுக்கல் மாவட்டம்
- திரு வீரமணி
- திரு குமார்
10. தேனி மாவட்டம்
- திரு வி. வடிவேல்
- திரு எஸ். ராம்ப்ரகாஷ்
11. கோயம்புத்தூர் மாவட்டம்
- திரு கேசவமூர்த்தி
- திரு கிருஷ்ணசாமி
12. நீலகிரி மாவட்டம்
- திரு தங்கராஜா
- திரு விவேகானந்தன்
13. கரூர் மாவட்டம்
- திரு மருதப்பன்
- திரு செல்வராஜ்
14. நாமக்கல் மாவட்டம்
- திரு ஜெகநாதன்
- திரு முத்துச்சாமி
15. விழுப்புரம் மாவட்டம்
- திரு வையாபுரி
- திரு பொன்னுசாமி
16. மதுரை மாவட்டம்
- திரு ஆர். மனோகரன்
- திரு கர்த்தான்
17. சென்னை மாவட்டம்
- திரு எ. ராமையா
- திரு எஸ். மோகன்
18. காஞ்சிபுரம் மாவட்டம்
- திரு கெப்பன்னன்
- திரு தங்கராஜ்
19. அரியலூர் மாவட்டம்
- திரு ஜெ. பிரபு
- திரு குலேந்திரன்
- மாவட்ட அமைப்பாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் – நம் சமுதாய மக்களுக்கு நமது பழமைவாய்ந்த கலாச்சாரங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மாவட்டம் தோறும் நம் சமுதாய கோரிக்கைகளை முன்நிறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மாநிலம் தழுவிய மாபெரும் பேரணியை சென்னையில் நடத்தி நம் சமுதாய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும்வண்ணம் தமிழக அரசுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தை நம் சமுதாய மக்களின் மீது செலுத்தும் விதத்தில் சிறப்பாக நடத்துவதென் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
- தகவல் பரிமாற்றம் மற்றும் சங்க செயல்பாடுகள் அனைத்தும் எல்லா மாவட்டத்திலும் உள்ள நம் சமுதாய மக்களை சென்றடைய அனைவரது முகவரிகளையும் தலைமைக்கு கிடைக்க மாவட்ட அமைப்பாளர்கள் உரிய ஏற்ப்பாடு செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மாவட்டப்பிரதிநிதிகள் அந்தந்த மாவட்டத்திலுள்ள கிராமம், ஒன்றியம், மாவட்டம் சங்க கிளைகளை துவக்கி அவற்றின் நிர்வாகிகளை தேர்வு செய்து தலைமைக்கு தெரியப்படுத்தவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நம் மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் மிகவும் எளிமையாக கிடைக்க உரிய நடவடிக்கைகளை அதற்கென பொறுப்பாளர்களை தேர்வுசெய்து அவர்கள் அப்பணியை சிறப்பாக வெற்றியடைய செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- மாவட்ட, மாநில பிரதிநிதிகள் பொறுப்புகளை ஏற்றவுடன் அனைவரும் கூடி, சங்கத்தின் செயல்பாடுகள், பொருளாதாரம், செலவினங்கள், சங்கப்பதிவு, வங்கிக்கணக்கு, பத்திரிக்கை நடத்துதல், திருமணப்பதிவு மற்றும் தகவல், கூட்டுறவு வங்கி மற்றும் டிரஸ்ட், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, விவசாயிகள் அணி, வியாபாரிகள் அணி, கல்வி அறக்கட்டளை, மாவட்டந் -தோறும் ஒரு திருமண மண்டபம், மாநிலத்தில் பெரிய திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி அமைப்பது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை ஆராய்ந்து அனைவரின் ஆலோசனையின் பேரில் முடிவு செய்து சங்கத்தை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்தவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
- எதிர்வரும் மார்ச் மாதம் “குருமன்ஸ் பழங்குடி மக்கள் வாழ்வுரிமை மாநாடு” திருவண்ணமலையில் நடத்துவது எனவும் அதற்க்கான தேதி மற்றும் நேரத்தை மாநில அமைப்பு ஒன்று கூடி அறிவிக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- நம் கலாச்சாரங்களை கட்டிக்காக்கும் வகையில் ஆடு வளர்க்கும் தொழிலை அழியாமல் காத்திட நவீனமுறையில் ஆடுகள் வளர்க்க உரிய ஆவணமும் அரசாங்க சலுகை பெற்றுத்தந்து சிறப்படையச் செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- உலகில் எந்த ஒரு பழங்குடி மக்களுக்கும் தீங்கிளைக்கப்பட்டால் அவற்றை எதிர்த்து குரல் கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பழங்குடி மக்களின் உரிமைகள் காத்திட தேவைப்பட்டால் தமிழக பழங்குடிகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அதிகப்படியாக செல்வாக்கு மற்றும் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பழங்குடி மக்களை பங்கேற்க செய்து அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தங்கள் அன்புள்ள
உதகை செங்குட்டுவன்
மாநில அமைப்பாளர்
கை பேசி எண் : 97890 06189